அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 3 ஆண்டு காலத்தில் ஏற்பட்ட நிர்வாக தோல்விகளை மறைக்க மின்கட்டணத்தை அடிக்கடி உயர்த்தியும், சொத்துவரி, குடிநீர்வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி மக்கள் மீது சுமைகளை ஏற்றும் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இன்றையதினம்

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டண ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அம்மா மக்கள் முன்னனேற்றக்கழக ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் தலைமை நிலையசெயலாளர் ராஜசேகரன், தெற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துக்கொண்டு தமிழக மக்களின் மீது மின்கட்டணம், சொத்துவரி, பால், அத்தியாவசிய பொருட்கள், சாலைவரி உள்ளிட்டவைகளை உயர்த்தி மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருப்பதுடன்,

போதைப்பொருட்கள் புழக்கம் மற்றும் கொலை, கொள்ளை அதிகரித்து மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் திமுக அரசைக் கண்டித்து பதாகைகளை கைகளில் ஏந்தியபடி கண்டண முழக்கங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments