
Advertisement
திருச்சி மத்திய சிறையில் இயற்கை முறையில் விளைந்த கரும்புகளை அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டனர்.

Advertisement
திருச்சி தென்னூர், சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழாவைமுன்னிட்டு பள்ளியில் பயிலும் 150 மாணவர்களுக்கும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இயற்கை முறை உரம் கொண்டு பயிரிடப்பட்ட சுவையான கரும்பு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மாணவருக்கும் முழு கரும்புடன் மாணவர்கள் மகிழ்ச்சியுடனும், முகக்கவசம் அணிந்தும் , சமூக இடைவெளியுடன் வந்து பெற்று சென்றனர். இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தம் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement



Comments