திருச்சி கொள்ளிடம் ஆற்றில் 96,200 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் கொள்ளிடம் பாலம் அருகே உள்ள உயர் மின்னழுத்த கோபுரம் சாயும் நிலையில் உள்ளது.

இந்த உயர் மின்னழுத்த கோபுரம் கீழே விழாமல் இருப்பதற்காக அருகில் உள்ள அழகியபுரம் கிராமத்தில் 200 மீட்டர் தொலைவில் கோபுரத்தை இரும்பு கம்பி மூலம் இழுத்து கட்டும் பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்ட போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது கொள்ளிடம் பாலம் சாலையின் அருகே பழைய கொள்ளிடம் பாலம் சாலையில் 7 அடி அளவிற்கு குழிகள் தோண்டப்பட்டு இரும்பு ராடுகளை உள்ளே வைத்து கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் நேப்பியர் பாலத்தின் செல்லும் வாகனங்கள் மீது உயர் மின்னழுத்த கம்பிகள் விழாமல் இருக்க சாரம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments