திருச்சியில் இன்று கடும் வெப்பம் நிலவியது. திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை அரை மணி நேரம் மழை பெய்தது. பின்னர் மாலை முதலே மழை வருவது போல் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தது. இந்நிலையில் இரவு திடீரென கனமழை திருச்சியில் பெய்து வருகிறது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம் கண்டடோன்மெண்ட் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் கன மழை பெய்ததால் மழை நீர் வெள்ள நீர் போல் ஓடியது.முக்கியமாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் குளமாக மாறியது.

பேருந்துக்கு ஏற வந்த பயணிகள் சிரமப்பட்டனர். 30 நிமிடம் கனமழை பெய்ததால் மத்திய பேருந்து நிலையம் முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது.

தஞ்சை மார்க்கத்தில் செல்லக்கூடிய பேருந்து மார்க்கங்களிலும், நகர பேருந்துகள் செல்லும் மார்க்கத்திலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்ததால் பொதுமக்கள் பெரும் அவதி உற்றனர். மறுபுறம் கடும் வெப்பத்திற்கு பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments