வெளிமாநிலங்களிலிருந்து தொழில் நிமித்தமாக தமிழ்நாட்டிற்கு நிரந்தரமாக புலம் பெயர்ந்து e-sharm வலைதளத்தில் பதிவு செய்த தொழிலாளர்களில், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும்.

மேலும் தற்காலிகமாகவோ / குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்து, அவர்களது சொந்த மாநிலத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்களும், புதிய மின்னணு குடும்ப அட்டை வேண்டி உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பங்களை மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பதன் மூலம் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும். புதிய குடும்ப அட்டை பெற்றவுடன் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” என்ற திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப்பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே வெளிமாநிலத்திலிருந்து திருச்சி மாவட்டத்திற்கு நிரந்தரமாக புலம் பெயர்ந்துள்ள தொழிலாளர்களும் /தற்காலிகமாக அல்லது குறுகிய காலத் தேவைக்காக குடும்பத்தை விட்டு, புலம் பெயர்ந்து வந்தவர்களும், (வேறெந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை பெறவில்லையெனில்) தங்கள் பகுதிக்குட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments