திருச்சி உறையூர் மெத்தடிஸ் பள்ளி அருகே வசிப்பவர் சங்கீதா. விதவை பெண்மணியான இவர் இன்று மதியம் வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென இரண்டு பேர் முகமூடி போட்டுக் கொண்டு சுவர் ஏறி குதித்து கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியை வைத்து கழுத்தை அமுக்கி மிரட்டினர்.

அவர் கழுத்தில் போட்டு இருந்த 5 பவுன் தங்கச் செயினை கத்தியை வைத்து பறித்து சென்றனர். அப்பொழுது அவர் கன்னத்தில் சிறு காயம் ஏற்பட்டது. உடனே மீண்டும் சுவர் ஏறி குதித்து இரண்டு பேரும் தப்பிவிட்டனர். இதுக்குறித்து தகவலறிந்த வந்த உறையூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் தலைக்குள்ளா போல் போட்டு முகமூடி அணிந்து வந்ததாகவும், கையில் கத்தியை வைத்து மிரட்டியதாகவும் குறிப்பிட்டார்.

அவர் வசித்து வரும் வீட்டின் காம்பவுண்ட் சுவர் சுமார் ஆறடி உயரத்திற்கு மேல் இருக்கும் திட்டமிட்டு பக்கத்து வீட்டு பகுதியில் இருந்து இரண்டு பேரும் பட்டப்பகலில் சுவர் ஏறி குதித்து விதவை பெண்மணியிடம் தங்கச் செயினை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           68
68                           
 
 
 
 
 
 
 
 

 24 August, 2024
 24 August, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments