Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம்று திருச்சியில் நேற்று நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் எம்.லகுமய்யா தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் பி.எஸ். மாசிலாமணி இன்றைய வேளாண் நிலைகளை விளக்கி கூறினார். தமிழகத்தில் பரவலாக பெரும்பகுதியாக பயிரிடப்படுவது மானாவரி புஞ்சைப் பயிர்கள் ஆகும். இது மனித உடல் வலுவுக்கும்; ஊட்டத்திற்கும் பயனளிக்க கூடியது.

ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இருந்தும் மானாவரி சாகுபடிக்கு தனி முக்கியத்துவம் இதுவரை கொடுக்கப்படவில்லை. மழையை நம்பி மட்டுமே… குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே சாகுபடி செய்யப்படும்  பயிர்களாகும். இந்த சாகுபடி பருவ கால மாறுதல்களால் மிகப்பெரிய நெருக்கடியில்  உள்ளது. பெரும்பாலும் இவர்கள் சிறுகுறு விவசாயிகளாக உள்ளதால் இவர்களின் குரல் இதுவரை வெளியில் கேட்பதில்லை. அதுவும் அண்மைக்காலமாக பெரும் நெருக்கடியில் இச் சாகுபடி இருக்கிறது. எனவே செப்டம்பர் 9 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளிக்கப்படும். 

அ) மானாவரி புஞ்சை தானியங்களுக்கு ஒன்றிய அரசு கூடுதல் விலை உயர்வையும்; இத்துடன் தமிழக அரசு இவ்விலைக்கு இணையான ஊக்கத்தொகையும் சேர்த்து விலை நிர்ணயம் செய்திட வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த இந்த தானியங்களை  அரசே கொள்முதல் செய்து பொது விநியோக அங்காடிகளில் விற்பனை செய்திட வேண்டும். வேளாண் துறையில் மானாவரி சாகுபடிக்கென தனித்துறை வேண்டும்.  ஏக்கருக்கு 10000 ரூ ஊக்க  மானியம் வழங்கிட வேண்டும். மானாவரி பகுதியில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி நீர் கொள்ளளவு திறனை அதிகப்படுத்த வேண்டும். தீர்மானங்கள்

           கடந்தாண்டு காவிரி நீர் கிடைக்காமலும்;பருவ கால இடர்பாட்டாலும் குருவை: சம்பா நெல் சாகுபடி மற்றும் இதர வேளாண் பயிர்கள் பாதித்தது. இப்பருவத்திற்கென  விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன் தொகை நிலுவையை வட்டியுடன் சேர்த்து செலுத்திட விவசாயிகள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதனால் விவசாயிகள் புதிய கடன் பெற முடியவில்லை. எனவே கூட்டுறவு வங்கிகளில் உள்ள  இந்த வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்து  புதிய கடன் வழங்கிட வேண்டும்.

     முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என தீர்ப்பில் உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. 
ஒவ்வொரு ஆண்டும்அணை உறுதித் தன்மையை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலில்  ஆய்வு செய்து உறுதி தன்மையை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த  நடிகர் மற்றும் பாஜக..வை சேர்ந்த ஒன்றிய அமைச்சர்.. முல்லைப் பெரியாறு அணை இடியும் நிலையில் உள்ளது என அப்பட்டமான பொய்யை கூறி கேரள மக்களிடம் அச்சத்தை பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளார். இது ஏதோ எதிர்பாராமல் சொல்வதில்லை .. பிஜேபி கொள்கைக்கு எதிரான கேரளா மற்றும் தமிழக ஆளும் அரசுகளுக்கு எதிராக.. இரு மாநில மக்களிடம் கலவரத்தை உருவாக்கிடும் திட்டமிட்ட  ஏற்பாடாகும் இது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இதை வன்மையாக கண்டிக்கிறது. மக்களின் ஒருமைப்பாட்டை குலைக்கும். இவர் மீது ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
   

      

மரபணு மாற்று கடுகு சாகுபடி சம்பந்தமான வழக்கில் உச்ச நீதி மன்றம் வெளியிட்டு இருக்கிற தீர்ப்பில்… மரபணு மாற்று பயிர்கள் குறித்து மத்திய அரசு ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்…  அதன் மீது மாநில அரசுகளிடம் ;பொதுமக்களிடம்  கருத்து கேட்டுமுடிவு எடுக்க வேண்டும் என கூறி  இருக்கிறது. இந்தியாவின் எதிர்கால சந்ததிக்கு தரமான உணவை கொடுத்திட வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. எனவே ஒன்றிய அரசு கால அவகாசம் கொடுத்து அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகளிடம் கிராம அளவில் கருத்தறிந்து உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கை கொடுத்து
     இக்கூட்டத்தில் துணை செயலாளர் .த. இந்திரஜித்..துணைத் தலைவர் சி.எம்.துளசி மணி.. கே.உலக
நாதன்முன்.எம்.எல்.ஏ..;எஸ்.சிவ சூரியன்..  இரா.முல்லை ; அ. பன்னீர்செல்வம்;  மு.மாதவன்; பி.பழனி உள்ளிட்ட மாநிலக் குழு உறுப்பினர்கள்  பங்கு கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய… 

https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *