வருகின்ற (31.10.2024)-ந் தேதி “தீபஒளி திருநாள்” தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை டிகையை பொதுமக்கள் பாதுகாப்புடன் கொண்டாடுவதை உரிது செய்தும் வகையில், தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, ஆணையின்படி

திருச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள், வெடிப்பொருள் விதிகள்-2008-ன்படி வெளியிடப்பட்டுள்ள படிவம் எண்.AE-5-யினை பூர்த்தி செய்து கீழ்கண்ட ஆவணங்களுடன் திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் வரும் வரும் (17.09.2024) அன்று மாலை 5:30 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்ப மனு, ரூ.2/-க்கான நீதிமன்ற அஞ்சல் வில்லையுடன் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவம் AE 5. விண்ணப்பதாரின் பாஸ்போர்ட் புகைப்படம் – 2 (தனியாக இணைக்கப்பட வேண்டும்). உத்தேசிக்கப்பட்ட கடையின் வரைபடம் (இரண்டு வழிகளில் இருக்க வேண்டும்). வரைபடத்தில் கடையின் முகவரி முழுமையாக குறிப்பிடப்பட வேண்டும். மேலும், மனுதாரரின் கையொப்பமிட்டு இருக்க வேண்டும். பட்டாசு கடை அமையவுள்ள இடம் சொந்த கட்டிடமாகயிருப்பின் அல்லது காலியிடமாக இருப்பின் (2024 – 2025)-ஆம் ஆண்டிற்குரிய முதலாம் அரையாண்டு வரை அதாவது (30.09.2024) வரை செலுத்தப்பட்ட சொத்து வரி ரசீது.

பட்டாசு கடை அமையவுள்ள இடம் வாடகை கட்டிடமாகயிருப்பின் அல்லது காலியிடமாக இருப்பின் 2024-2025-ஆம் ஆண்டிற்குரிய முதலாம் அரையாண்டு வரை அதாவது (30.09.2024) வரை செலுத்தப்பட்ட சொத்து வரி ரசீது, உரிமையாளரின் சம்மதக் கடிதம் மற்றும் உரிமையாளருடன் ஏற்படுத்திக் கொண்ட வாடகை ஒப்பந்தப்பத்திரம்.(ரூ.20/- மதிப்புள்ள முத்திரைத்தாளில்)

தற்காலிக பட்டாசுக்கடை வைப்பதற்கான உரிய வணிக உரிமம் பெற திருச்சி மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்திய அசல் இரசீது. உரிமக் கட்டணம் ரூ.500/- ஆண்லைனில் செலுத்தியதற்கான அசல் ரசீது. மாநகராட்சி/பொதுப்பணித்துறை மற்ற துறை கட்டிடமாக இருப்பின் அத்துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம்.

விண்ணப்பதாரின் குடும்ப அட்டை (அ) ஆதார் அட்டை நகல்கள். அசல் விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களுடன் 4 நகல்கள் இணைக்கப்பட வேண்டும். (17.09.2024) அன்று மாலை 5:30 மணிக்குள் பெறப்படும் முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு, விசாரணைக்கு பின் காவல்துறை கண்ணோக்கில் திருப்தியடையும் பட்சத்தில் மட்டும் உரிமம் வழங்கப்படும்.

மேற்கண்ட தேதிக்கு பின்னர் விண்ணப்பம் சமர்பிக்க காலக்கெடு நீட்டிப்பு செய்யப்படமாட்டாது. குறித்த காலக்கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்பின்றி தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           120
120                           
 
 
 
 
 
 
 
 

 04 September, 2024
 04 September, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments