திருச்சி தென்னக ரயில்வே மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத காலமாக வார நாட்களில் குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் குழந்தை நலன் சார்ந்த சட்டங்கள் குறித்து இரயில்வே பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சி அளித்த குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் ச.பிரபு-விற்கு பாராட்டு சான்றிதழ் நிறுவன முதல்வரால் (03.09.2024) வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் (04.09.2024) சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி உள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments