Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஊரகப்பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விண்ணப்பிக்க கடைசி நாள் – ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வருகின்ற (31.10.2024) அன்று கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 -ன் கீழ், ஊரகப்பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர், விதி எண் 84-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி இணையதளம் வழியாக மட்டும் (24.10.2024)-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் மேற்படி விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். மேற்படி விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரரின் கடவுச் சீட்டு அளவு புகைப்படம். விண்ணப்பதாரரின் இருப்பிட முகவரிக்கான ஆதாரம்/கடை வைக்கப்படும் இடத்தின் முகவரிக்கான ஆதாரம்)

PAN card/ஆதார் அட்டை/வாக்காளர் அடையாள அட்டை/ஓட்டுநர் உரிமம். உரிமக் கட்டணம் ரூ.500/ஐ e challan மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய செலுத்து சிட்டு அசல். சொந்த கட்டிடம் எனில் பட்டா நகல்/வாடகை கட்டிடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திரம் (பட்டாசுக்கடை நடத்த சம்மதம் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்) / குத்தகை நிலம் எனில் குத்தகை ஆவணம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேற்கண்ட இடத்திற்கான வரி ரசீது இணைக்கப்பட வேண்டும். சுய உறுதிமொழிப் பத்திரம். கட்டடிட அமைவிட வரைபடம்/கட்டிட திட்ட அனுமதி (A4 அளவில்) மேற்கண்ட விண்ணப்பங்களை (24.10.2024)-க்குள் மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

உரிமக்கட்டணம் ரூ.500-ஐ கீழ்க்காணும் IFHRMS அரசுக்கணக்கு தலைப்பில் இணையதளம் வாயிலாக செலுத்தி அதற்கான அசல் செலுத்து சீட்டு இணைக்கப்பட வேண்டும்.

Department code 02301 District Tiruchirappalli DDO Code 15010007

Account code 007060103AA22799

மேற்படி விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில், தற்காலிக உரிம ஆணையையும், நிராகரிக்கப்பட்டதெனில், அதற்கான ஆணையையும் இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் அனுமதியின்றி/ உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நேர்வில், தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறும், விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிட மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று திருச்சிராப்பள்ளி மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *