திருச்சி கண்டோன்மென்ட் காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது மருத்துவ குழுவினர் கூறியதாவது…. எலெக்ட்ரோ பிசியாலஜி (EP ) என்பது இதய சிகிச்சை பிரிவின் தனி சிறப்பாக நோயாளிகளின் சீரற்ற இதய துடிப்பு கோளாறுகளை கண்டறிந்து கையாள உதவுகிறது.

இதய நோயாளிகள் ஒரு EP ஆய்வகத்தில் தங்களை சோதனைக்கு உட்படுத்தி உபாதைகளை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளலாம். உயரிய அதி நவீன 3D தொழில்நுட்ப வசதிகள் கொண்ட எலக்ட்ரோ பிசியாலாஜி (EP Lab) ஆய்வகம் முதன் முறையாக 2021 ஆம் ஆண்டு காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனையில் துவங்கபட்டது.

கடந்த 3 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட சீரற்ற இதய துடிப்பு கொண்ட நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் வெற்றிகரமான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை, வங்காளதேசம் மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் நோயாளிகளும் இதன் மூலம் பயன் பெறுகின்றனர்.

2023ஆம் ஆண்டு மாநிலத்தில் முதன் முறையாக பிரத்யேக குழந்தைகள் நல EP பிரிவு நிறுவபட்டது. ஜோசப், முன்னணி எலக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் & இண்டர்வென்ஷனல் கார்டியாலாஜிஸ்ட் இதை பற்றி கூறுகையில்….. வெற்றிகரமாக சிகிச்சை பெற்ற நோயாளிகள் எண்ணிக்கையை விட எங்களது இலக்கு சமூகத்தின் அனைத்து மக்களும் குறைந்த விலையில் இந்த பயனை அடைந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்றார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் செயல் இயக்குநர் டி செந்தில் குமார் கூறியதாவது….. காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை தொடர்ந்து உலகத்தரமான நவீன தொழில்நுட்பங்களை இப்பகுதிக்கு கொண்டுவருவதில் முன்னோடியாக திகழ்கிறது. எலக்ட்ரோபிசியாலஜி துறையில் எங்களின் சேவை நோயாளிகளுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், எங்கள் மருத்துவமனையில் எலக்ட்ரோ பிசியாலஜியில் (EP) FNB பாடத்திட்டத்தை துவங்குவதற்கு NBE (தேசிய தேர்வு வாரியம்) அங்கீகரித்துள்ளது. நமது நாட்டில் EP சூப்பர் ஸ்பெஷாலிட்டி கல்வியை தொடங்க அங்கீகாரம் பெற்ற சில கார்பரேட் மருத்துவமனைகளில் நாமும் ஒன்று என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது முதுநிலை பொது மேலாளர் மாதவன், துணை மருத்துவ நிர்வாகி கோகுலகிருஷ்ணன், முதுநிலை பொது மேலாளர் (இயக்குதல்) ஆண்ட்ரூஸ் நித்திய தாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           125
125                           
 
 
 
 
 
 
 
 

 03 October, 2024
 03 October, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments