திருச்சி ஜம்புகேஷ்வரம் ரோட்டரி சங்கம் மற்றும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா இணைந்து கே.கே.நகர் பகுதியில் அமைந்துள்ள விமான நிலைய ஆணையக் குழும ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் சுற்றுச்சூழலை வளப்படுத்தும் விதமாக மரக்கன்று நடுவிழா நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் கோபாலகிருஷ்ணன், விமான நிலைய இயக்குனர் மற்றும் விமான நிலைய உயர் அதிகாரிகள், விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர் பத்திநாதன், ஜம்புகேஷ்வரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பாரத் மற்றும் சங்கத்தின் மரம் நடுவிழா திட்ட தலைவர் மணி மற்றும் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தனர்.

பன்னாட்டு ரோட்டரி அமைப்பு சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு அதிக கவனம் கொடுத்து செயல்படுத்தி வருவதின் அடிப்படையில் ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் ஜம்புகேஸ்வரம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தொடர்ந்து இதுபோன்று அதிக மரக்கன்றுகளை பல்வேறு இடங்களில் நட இருப்பதாக சங்கத்தின் தலைவர் பாரத் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments