
Advertisement
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ஆம் தேதி இந்திய தியாகிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.1948-ஆம் ஆண்டு இதே தினத்தில் காந்தியடிகள் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். மகாத்மா காந்தியின் 73-வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு புத்தூர் அரசு மருத்துவமனை அருகிலுள்ள காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர்களும் மாணவ மாணவியர்களும் சென்று நினைவஞ்சலி செலுத்தி வந்தனர்.

Advertisement
வரலாற்றில் காந்தியின் பங்கு ஏற்படுத்திய மாற்றத்தை பற்றியும், அவர் இந்திய மக்களுக்கு கற்றுகொடுத்த அகிம்சையின் வலிமையைப் பற்றியும், வரலாற்றுத் துறையின் கௌரவ பேராசிரியர் T.அருளானந்து மாணவர்களிடத்தில் பகிர்ந்துகொண்டார்.

Advertisement

Advertisement






Comments