திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை கோலாலம்பூரில் இருந்து பட்டிக் ஏர் பிளைட் விமானம் வந்திறங்கியது. அதில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பயணி ஒருவர் தனது லக்கேஜில் சாக்லேட் டப்பாக்களில் மறைத்து வைத்து 2447 நட்சத்திர ஆமைகளை உயிருடன் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நபரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments