திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவிடம் ரயில்வே சார்ந்த கோரிக்கைகளை பொதுமக்கள் மனுவாக அளித்துள்ளனர். இது தொடர்பாக எம்.பி துரை வைகோ மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே கோட்ட மேலாளர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுக்கள் தொடர்பாக விவாதித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக இன்று ரயில்வே சார்ந்த கோரிக்கை மனுக்களில் இடம்பெற்ற பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்… திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரயில்வே சார்ந்த கோரிக்கைகள் எனக்கு பொதுமக்கள் வாயிலாக வழங்கப்பட்டது.

அந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக ரயில்வே அதிகாரிகளை சந்தித்து சாத்தியகூறுகளை விவாதித்து வருகிறேன். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு ரயில்வே துறைஅமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரயில்வே சார்ந்த கோரிக்கைகளை அவரிடம் வழங்கினேன். அவருக்கு அமைச்சர் அவர்களும் முடிந்தவரை நிறைவேற்றி தருகிறேன் கூறினார்.

இன்றைய தினம் ரயில்வே தொடர்பான கோரிக்கைகள் குறித்து மக்களிடம் நேரடியாக சென்று மனுக்கள் பெறப்பட்டது. குறிப்பாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் உள்ள மேல குமரேசபுரத்தில் ரயில்வே சப்வே அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அருகில் உய்யக்கொண்டான் வாய்க்கால் செல்வதால் இங்கு சப்வே அமைக்க இயலாத நிலை உள்ளது.

அதற்கு பதிலாக ரயில்வே மேம்பாலம் அமைக்க சாத்திய கூறுகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக கோட்ட மேலாளரை சந்தித்து விவாதிக்கப்பட்டது அவரிடம் பொது மக்களின் கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது அதில் குமரேசபுரத்தில் மேம்பாலம் ரயில்வே மேம்பாலம் அமைப்பது மற்றும் இதர கோரிக்கைகளை வைத்தேன். அதில் 70% நிறைவேற்றி தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் அதற்காக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெறுவதற்காக அனைத்து நடவடிக்கைகள் எடுக்க தொடர்ந்து செயல்படுவேன் என்றார். திருச்சிக்கு மெட்ரோ ரயில் சேவை சாத்திய கூறுகள் குறித்து கேட்டபோது, சென்னையில் தற்பொழுது இரண்டாம் கட்ட மெட்ரோ அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. அதற்காக ஒன்றிய அரசும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் திருச்சிக்கு அறிவிப்பு வெளியாகவில்லை. தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ வரும்பொழுது நிச்சயமாக திருச்சிக்கும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இதனை தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நான் கோரிக்கையாக வைக்கப் போகின்றேன். ஏற்கனவே நாடாளுமன்ற கூட்டத்தில் திருச்சிக்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவதன் அவசியம் குறித்து விளக்கி பேசி உள்ளேன். நிச்சயமாக அதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           124
124                           
 
 
 
 
 
 
 
 

 04 January, 2025
 04 January, 2025





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments