திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேக விழாவிற்காக திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று வெகு விமர்சையாக கும்பாபிஷேக விழா லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் கடந்த 26-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாஸ்து சாந்தி, நாடிசந்தானம், அங்குரார்பணம், யாகசாலை பிரவேசம்,வேத பாராயணம், யாக வேள்வி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அப்போது கடம்புறப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் கோயில் கோபுர கலசத்திற்கு ஊற்றி கோயில் கும்பாபிஷேகத்தை செய்து வைத்தனர். விழாவில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், அறநிலையத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதனைதொடர்ந்து கோயில் மூலஸ்தானத்தில் மதுரை காளியம்மனுக்கு பல்வேறு விதமான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments