Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி வயலூர் முருகன் கோயிலில் நவீன தீண்டாமையை கடைபிடிக்கும் சிவாச்சாரியார்களை கண்டித்து ம.க.இ.க, பு.ஜ.தொ.மு தோழர்கள் போராட்டம்.

திருச்சி வயலூர் முருகன் கோயிலில் நவீன தீண்டாமையை கடைபிடிக்கும் சிவாச்சாரியார்களை கண்டித்து ம.க.இ.க, பு.ஜ.தொ.மு தோழர்கள் போராட்டம்.

அனைத்து சாதியினர் அர்ச்சகர் பயிற்சி மூலம் தேர்வாகி தமிழக அரசால் பல கோயில்களில் நியமிக்கப்பட்ட பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களை இன்றுவரை கருவறையில் நுழைந்து பூஜை செய்ய சிவாச்சாரியார்கள், பார்ப்பனர்கள் அனுமதிப்பதில்லை. 

இதனை கண்டித்து அர்ச்சக பயிற்சி பெற்ற மாணவர்கள் பல ஆண்டுகள் போராடியும் தீர்வு எட்டப்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் ம.க.இ.க தோழர்கள் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து திருச்சி வயலூர் முருகன் கோயிலில் போராட்டம் நடத்தி அர்ச்சகர்கள் பிரபு மற்றும் ஜெயபால் ஆகியோரை கருவறைக்குள் பூஜை செய்ய வைத்தனர்.

ஆனாலும் மீண்டும் அதே தீண்டாமை அக்கோயிலில் கடைப்பிடிப்பதாக பாதிக்கப்பட்ட அர்ச்சகர்கள் தெரிவித்ததன் அடிப்படையில்17.02.2025 அன்றும.க.இ.க சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

இன்று (19.02.2025) காலை 10 மணியளவில் திருச்சி வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அர்ச்சகர்கள் பிரபு, ஜெயபால் இருவரையும் முருகன் சிலை கருவறைக்குள் பூஜை செய்ய அனுமதி மறுத்தும், 

பெரிய கோபுரத்தில் ஏற்றாத சிவாச்சாரியாரியர் மற்றும் பார்ப்பனர்களை கண்டித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்காத இந்து அறநிலையத் துறையை கண்டித்தும் ம.க.இ.க மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.

அரோ…கரா… முருகா கோஷத்தில் பக்தர்களோடு பக்தர்களாக தோழர்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கோவில் முன்பு திரள்வதே பெரும் போராட்டமாக இருந்தது. 

ஜண்டை மேளம் முழங்க பெரிய ஒலிபெருக்கி மூலம் முருகப் பாடல்களுக்கு இடையில் இந்த நூதன போராட்டம் பக்தர்கள் மத்தியில் பார்ப்பன அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டும் என்பதை உணர்த்தியது.

தோழர்கள் கையில் வைத்திருந்த முழக்கத் தட்டிகளை மக்கள் ஆர்வமுடன் படித்தபடி சென்றனர். 

சிறிது நேரத்தில்பா.ஜ.க வினர் நம்மிடையே வந்து இதெல்லாம் இங்கு செய்யக்கூடாது என தகராறு செய்தனர்.அவர்களிடம் தோழர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அங்கு வந்த காவல்துறையினர் தோழர்கள் அனைவரையும் கைது செய்து தற்போது மண்டபத்தில் அடைத்துள்ளனர்.

இப்போரட்டத்தில் ம.க.இ.க மாநில செயற்குழு உறுப்பினர் தோழர்.லதா,

தோழர்.சரவணன், தோழர்.சீனிவாசன்,

பு.ஜ.தொ.மு மாவட்ட இணைச் செயலாளர் தோழர்.மணலிதாஸ், மாவட்ட துணைத் தலைவர் தோழர்.ஆனந்த், மக்கள் அதிகாரம் மாநில இணைச்செயலாளர் தோழர்.செழியன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *