தேசிய பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் இன்று மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக, மருத்துவமனையில் பணியாற்றும் பெண்களுக்கு சாலையில் பாதுகாப்பாக இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது கட்டாயமாக தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில், இன்று காலை மருத்துவமனை வளாகத்திற்கு வந்த அனைத்து பெண்களுக்கும் மருத்துவமனை நிர்வாகம் ரோஜா மலர் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தது. இந்த முயற்சி, பெண்கள் சாலையில் பயணிக்கும் போது பாதுகாப்பின் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே அனைத்து ஊழியர்களும் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனங்கள் பயணம் செய்து வரும் பொழுது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வர வேண்டுமென உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு வாரத்தை ஒட்டி மகளிர் தினமான இன்று மகளிரையும் 100 சதவீதம் தலைக்கவசம் அணிந்து வர விழிப்புணர்வு ஏற்படுத்தி வலியுறுத்தப்பட்டது. மருத்துவமனை நிர்வாகம், “பெண்கள் தங்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து தலைக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும். இது அவர்களின் உயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும்” என காவேரி மருத்துவமனையின் பொது மேலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் மகளிர் தினத்தில் மருத்துவமனையில் கரும்பலகை ஒன்றை வைத்து தங்களின் கனவு மெய்ப்பட வாசகங்களை பெண்கள் வைத்து எழுதும் நிகழ்வும் நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மகளிர் தினத்தை முன்னிட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
Comments