திருச்சிராப்பள்ளி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குண்டூர் ரேஷன் கடையில் கடந்த 2003 ஆம் ஆண்டு சண்முகசுந்தரம்(SC/PL) வயது65 தா.பெ அழகன் பெருஞ்சுனை கிராமம்,இலுப்பூர் தாலுகா புதுக்கோட்டை மாவட்டம் என்பவர் ரேஷன் பொருட்களை திருடியதாக நாவல்பட்டு காவல் நிலைய குற்ற எண் 345 / 2003 ச.பி 379 இதச- ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு
கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவில் நீதிமன்றத்தால் ஒரு வருடம் ஆறு மாதம் தண்டனை 27/9/2023 ஆம் தேதி கொடுக்கப்பட்டது.அதன் பிறகு மேல் முறையீடு செய்து (7. 03.2025)-ஆம் தேதி மேற்படி தண்டனையை 10 மாதங்களாக குறைக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்துவந்தவரை இன்று (26.03.2025)-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்
பகுதியில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நவல்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு ஜஸ்டின் திரவியராஜ் என்பவர் அவரது குழுவுடன் அன்னவாசல் சத்திரம் கிராமத்தில் கைது செய்து சிறைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments