Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

நவல்பட்டு காட்டாறினை தூர்வாரும் பணியை அமைச்சர் மகேஸ் தொடங்கி வைப்பு

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அருகே காட்டாறினை நீர் வளத்துறை சார்பில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டு ரூ 35 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரும் பணியினை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பாசன அமைப்புகள் மற்றும் பாசன ஆதாரங்களாக விளக்கும் வாய்கால்களில் 1071 பணிகளாக 6179.60 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.120.00 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் தூர்வார தமிழ்நாடு அரசு அரசாணை (2D) எண்.9 நீர்வளத்துறை (கே-1) துறை நாள் 06.03.2025-61 வாயிலாக பணி மேற்கொள்ள ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள பாசன ஆதாரங்களை சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரும் வகையில் மொத்தம் 115 பணிகள் 343.14 கி.மீ. நீளத்திற்கு ரூ.16.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து18 ஆயிரத்து 258 ஏக்கர் நிலங்களின் பாசன வசதி மேம்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் சூரியூர் புது குளத்தில் இருந்து பிரிந்து வரும் காட்டரான கும்பக்கோடி நற்கடல் குடி, சோழமாதேவி வரை வந்து அதற்குப் பிறகு உய்ய கொண்டான் ஆற்றில் கலக்கிறது.அந்த காட்டாறை குண்டூர்- நவல்பட்டு 100 அடி சாலையின் கீழ்புறம் பகுதியில் காட்டாற்றில் நெடுகை 9200 மீ முதல் 11200மீ வரை சுமார் 2000 மீட்டர் தூரம் தூர் வாரும் பணியில் நடைபெறுகிறது இதில் முதல் 1000 மீட்டருக்கு 25 லட்சமும் அடுத்த 1000 மீட்டர் தூரத்திற்கு 10 லட்சம் என மொத்தம் ரூ 35 லட்சம் மதிப்பீட்டில் தூர் வரும்பணியினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.இந்த விழாவில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் மேனகா திருவெறும்பூர்

தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், திமுக நிர்வாகி கயல்விழி, மற்றும் அரசு அதிகாரிகளும், பொதுமக்களும், கட்சியினரும் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *