திருவெறும்பூர் அருகே திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த திமுக தலைவர் 72 ஆவது பிறந்தநாள் விழா பட்டிமன்றத்தில் கட்டப்பட்டிருந்த சீரியல் கட்டவுட்டை பிடித்த மின் ஊழியர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவெறும்பூர் அருகே திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலினின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் பட்டிமன்ற விழா நடந்தது.இந்த விழாவில் திமுக வினரை வரவேற்று வண்ண விளக்குகள் தோரணங்கள் மற்றும் திமுக தலைவர் உருவம் பதித்த சீரியல் செட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கூட்டம் முடிந்து அவற்றை பிரிக்கும் பணி நடைபெற்றது அப்பொழுது மு க ஸ்டாலின் உருவ சீரியலை பிரித்த பொழுது தவறி விழுந்த தனியார் மின் ஊழியரான நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சேர்ந்த செந்தில் (50) என்பவர் பலத்த காயமடைந்தார்.பக்கத்தில் இருந்தவர்கள் செந்திலை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேற் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சையில் இருந்த செந்தில் நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.தமிழகம் முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட பட்டிமன்றத்தில் மின் ஊழியர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments