Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் கல்லூரி பகுதிகளில் போதை மாத்திரை விற்ற மூன்று பேர் கைது iphone கஞ்சா பறிமுதல் செய்து ஏ.எஸ். பி அதிரடி

திருவெறும்பூர் அருகே காட்டூர் உள்ள கல்லூரிபகுதியில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட போதை மாத்திரை விற்ற இரண்டு பேர் உட்பட மூன்று பேரை திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பனாவத் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

 திருச்சி எஸ் பி செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் ஏஎஸ்பி அரவிந்த் பனாவத் வழிகாட்டுதலின்படி திருவெறும்பூர் அருகே காட்டுர் பகுதியில் உள்ள கல்லூரி அருகில் போதைப் பொருள் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய தனிப்படை நேற்று முன்தினம் மாலை காட்டுர் கல்லூரி

அருகில் போதைப்பொருள் விற்பனை கண்காணித்த போது இரண்டு நபர்கள் போலீசாரை கண்டு ஓட முயன்றபோது போலீசாருடன் சேர்ந்து வளைத்து பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசியவர்களை தொடர்ந்து விசாரித்தப்போது. 

திருச்சி தில்லை நகர் மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்த வீரராஜ் மகன்

ஸ்ரீஹரிஸ்குமார் (30)

உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரை சேர்ந்த

செல்வம் மகன் ராமர் (எ) ராகேஷ் (31) என்று

 கூறி உள்ளனர்.

இந்நிலையில் 

 ஸ்ரீஹரிஸ்குமார் என்பவனை சோதனை

செய்ததில் அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த லிப்லாக் பச்சை நிற மாத்திரைகள் 16 ம் இரண்டு

கஞ்சாவும் இருந்தது. மேலும் அவரது பாக்கெட்டில் ஆப்பிள் ஐபோன்

 ஒன்றும் இருந்தது

 அதன் பின்னர் ராமா (எ) ராகேஷ் என்பவனை சோதனை செய்த போது ஆண்ட்ராய்டு செல்போன் ஒன்றும் இருந்தது. பின்பு மேற்படி ஹரிஸ்குமாரிடம் கைப்பற்றப்பட்ட மாத்திரைகயை பற்றி விசாரித்தப்போது அதுஅரசால் தடை செய்யப்பட்ட எம் டி எம் ஏ கோதை மாத்திரைகள் என்றும்

அதை விற்பனைக்காக வைத்திருந்ததையும்ஒத்துக்கொண்டான்.

 அவனிடமிருந்து எம் டி எம் ஏ

16 மாத்திரைகளையும் எடை போட்டு பார்த்தப்போது சுமார் 7.1 கிராம் அளவு இருந்தது.அதன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் ஸ்ரீஹரிஸ்குமார் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் திருச்சி தீரன் நகர் 2 வது கிராஸில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகில் சென்ற போது ஒரு நபர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளான் அவனை போலீசார் பிடித்து விசாரித்த போதுதிருச்சி தீரன் நகரைசேர்ந்த ஜெகநாதன் மகன் ரங்க சுரேந்திரன் (33)என தெரிய வந்தது அதன் அடிப்படையில் அவர்கள் மூன்று பேர் மீது வழக்கு பிரிவு

22(c), 27(a) NDPS Act ன் படி வழக்கு பதிவு செய்து எதிரிகளை கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதிஉத்தரவின் பேரில் அவர்கள் மூன்று பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

அவர்களிடமிருந்து மெகா குளோன்போதை மாத்திரைகள் 9 கிராம் மதிப்பு 18000,

66எம் டி எம் ஏ மாத்திரைகள் 29.11 கிராம் இதன் மதிப்பு ஒரு லட்சத்து 32 ஆயிரம்,

கஞ்சா 14 கிராம் ரூ 2000 ஒஜி கஞ்சா 2 கிராம் ரூ 5000இரண்டு எடை போடும் எந்திரம் மதிப்பு 2000, 2ஆப்பிள் ஐபோன் ஒரு லட்சம்,ஆண்ட்ராய்டு போன் 20000 ஆகிய மதிப்புள்ள பொருட்களை திருவெறும்பூர் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *