Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இரண்டு நாளில் ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழா 3 வருட காலமாக மூடி இருக்கும் கோபுரம்.ஸ்ரீரங்கம் வாசிகள் அவதி. எப்போது விடிவு ?

ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரம் வாசல் திறப்பு எப்போது பராமரிப்பு பணிகள் முடிவு? விடிவுக்காக காத்திருக்கும் ஸ்ரீரங்கம் வாசிகள்ஸ்ரீரங்கம் 110 அடி கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தில் உள்ள நிலைகள்,பெரிய கற்கள், காரைகள் (04.08.2023)நள்ளிரவில் விழுந்தது.

இதையடுத்து அவ்வழியே செல்லும் பக்தர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும்,பூலோக வைகுண்டமாக திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் திகழ்கிறது.ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தினசரி தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையால் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை, ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் நுழைவு ராஜகோபுரத்தில் உள்ள நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு எந்தநேரம் கீழே விழும் அபாய நிலைஇதனை சீரமைக்கும் பணியை மேற்கொள்ளாமல் சிமென்ட் மேற்புற பூச்சு உடைந்து கீழே விழாமல் இருப்பதற்காக கம்புகளைக் கொண்டு முட்டுக் கொடுத்து இருந்தனர்.

 கிழக்கு வாசல் நுழைவு ராஜகோபுரம் மேற்புற பூச்சுகள் மற்றும் மேற்பகுதி இடிந்து விழும் என்று தெரியாமல் அவ்வழியாக தினசரி அச்சத்துடன் கிழக்கு வாசல் கோபுரத்தை கடந்து சென்றனர்.  ரூ 98 லட்சம் செலவில் உடனடியாக பூர்வாங்க பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளதாக ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் குறிப்பிட்டார்.

கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் அருகிலேயே கிழக்கு ரங்கா மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராஜன் நடுநிலைப்பள்ளி, ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள் அருகருகில் செயல்பட்டு வருகிறது.

ஸ்ரீரங்கம் கீழச்சித்திர வீதியில் இருந்து கீழே அடைய வளஞ்சான் செல்லக்கூடிய பகுதியில் இந்த கோபுரம் அமைந்துள்ளது.9 நிலைகளைக் கொண்டது. இந்த கோபுரம் 110 அடி உயரம் கொண்டது.2022 ஆம் ஆண்டில் சிறிய பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கோபுரத்தில் பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளது.

ஸ்ரீரங்கம் கோவிலில் தினமும் திருவிழா தான் நடைபெறும். இந்நிலையில் முக்கிய திருவிழாக்கள் நடந்து வரும் நிலையில் இந்த கோபுரம் வழியாக பக்தர்கள் வர முடியாமல் பெருத்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதைவிட தினமும் பள்ளிகளுக்கு வருபவர்கள் கோயிலுக்கு வருபவர்கள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 1.5 கிலோமீட்டர் தூரம் சுற்றி வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை எந்தவித பணிகளும் நடைபெறவில்லை என அப்பொழுது மக்களும் பக்தர்களும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

வருகிற 26 ஆம் தேதி ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழா நடைபெற உள்ளது. இந்த கோபுரத்திற்கு எதிரே தான் சித்திரை தேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோபுரம் எதற்காக பணிகள் நடைபெறாமல் இவ்வளவு நாள் தாமதமாக்கப்பட்டது.

வேறு ஏதும் காரணம் உள்ளதா ஏன் இந்த கோபுர பராமரிப்பு பணிகள் தாமதப்படுத்தப்படுகிறது ஏராளமான உபயதாரர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கைங்கரியங்களும் செய்ய தயாராக இருக்கும் பொழுது இதில் என்ன தாமதம் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *