கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்தவர் போப் பிரான்சிஸ். கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவு காரணமாக சிச்சை பெற்று வந்தார்.ஈஸ்டர் பெருவிழா மறுநாள்
கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி போப் பிரான்சிஸ் காலமானார். வத்திகானில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி தமிழ்நாடு அரசின் சார்பாக சிறுபான்மை துறை அமைச்சர் நாசர், திருச்சி கிழக்கு
சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் ரோம் வத்திகான் சிட்டிக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments