திருச்சி மாநகர முதன்மை பொறியாளராக (CE) D.விஜூலா பொறுப்பேற்பு.திருச்சி மாநகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக முதன்மை பொறியாளர் (CE) பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக இருந்தது.
இப்பணியை திருச்சி மாநகராட்சி நிர்வாக பொறியாளர் சிவபாதம் கூடுதலாக கவனித்துவந்தார். இவரால், மாநகராட்சியில் பணிகள் மேற்கொள்ள ₹60 லட்சம் வரை மட்டுமே நிதி கோர முடியும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சியின் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வந்த D.விஜூலா (D.Vijula), பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டு, திருச்சி மாநகர முதன்மை பொறியாளராக (CE) இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.இவரால், திருச்சி மாநகராட்சியில் பணிகள் மேற்கொள்ள ₹2 கோடி வரை நிதி கோர முடியும் என்ற நிலை எழுந்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments