Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு வெறும் அறிவிப்பாக இருக்கக் கூடாது -அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

மே தினமான இன்று தமிழக முழுவதும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்விதுறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் முன்னிலையில் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்கும், மே தின நினைவுச் சின்னத்திற்கும் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.  

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், 

மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானவர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி

இந்த சமுதாயத்திற்காக உழைக்கக்கூடிய அனைத்து தொழிலாளர்களுக்கும், பத்திரிகைத்துறை சார்ந்தவர்களுக்கும், ஒவ்வொருவரும் அந்தந்த சமூகத்திற்காக ஒவ்வொரு வகையிலும் உழைத்து வருகின்றனர், அவர்கள் ஒவ்வொருவருக்கும் மே தின வாழ்த்துக்களை, தொழிலாளர்கள் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

 *மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு அறிவித்திருக்கிறது என்ற கேள்விக்கு* 

தமிழக முதல்வர் கேள்வி எழுப்பியிருக்கிறார். எப்பொழுது சாதி வாரி கணக்கெடுப்பு ஆரம்பிக்கும், எப்பொழுது முடிவடையும் என்று இல்லாமல் அறிவிப்பை கொடுத்திருக்கிறார். பீகாருக்கு அடுத்து தேர்தல் வர உள்ளது, 5மாநில தேர்தலும் வரவுள்ளது இந்த தேர்தல் காலம் முடியும் வரை இதுபோல் பலவிதமான அறிவிப்புகளை அவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம் அறிவிப்பு அறிவிப்பாக இருக்க கூடாது அதனை செயல்படுத்த வேண்டும். அது வரும் பொழுது தமிழக முதல்வர் எதற்கும் தயாராக உள்ளார்

திருச்சி மாவட்டம் தற்போது 104 டிகிரி வெயில் உள்ளது. உரிய நேரத்தில் முடிவெடுத்து ஜூன் மாதம் 2 ஆம் தேதி தெரிவித்துள்ளோம் அன்று வெயில் குறித்து தமிழக முதல்வர் அலுவலகம் என்ன சொல்லுகிறதே அதன்படி பள்ளி திறக்கப்படும்.

 *தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது அதிக அளவு கட்டணம் வாங்கப்படுகிறது என்ற கேள்விக்கு* 

அதிகம் அளவு கட்டணம் வாங்க கூடாது அதற்காக கட்டண நிர்ணய ஆணையமே வைத்துள்ளோம். முன்னாள் நீதி அரசர் தலைமையில் கமிட்டி என்ன சொல்கிறதோ நிர்ணயித்திருப்பதை காட்டிலும் அதிக படியாக கட்டணம் வாங்கினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வரும் 2026 எதிர்க்கட்சியாக கூட வராது என்று தமிழக வெற்றி கழகம் விஜய் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு

அது அவருடைய எண்ணம், கட்சி ஆரம்பித்தால் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்கிறார்.

 தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் மட்டும் தான் எதிர்க்கிறது என்று அமைச்சர் நிர்மலா சீதாராம் கூறி உள்ளார் என்ற கேள்விக்கு

தேசிய கல்விக் கொள்கை என்பது மொழி சார்ந்தது இல்லாமல் பல்வேறு சரத்துக்கள் உள்ளது. இடைநிறுத்தம் இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. இடைநிறுத்தல் அதிகப்படுத்தும் வேலையை தான் அவர்கள் செல்கிறார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்வு என்று தெரிவித்துள்ளோம். ஆனால் புதிய கல்விக் கொள்கையில் 3, 5, 8, மூலமாக குழந்தைகள் இடைநிறுத்தல் அதிகமாக இருக்கும், ஆசிரியர்களை வஞ்சிக்கக்கூடிய, மாணவர்கள் நலம் சார்ந்த வஞ்சிக்ககூடிய பல கருத்துக்கள் அதில் உள்ளது.

நாம் இருமொழி கொள்கையில் நம்மை நிருபணம் செய்யப்பட்டுள்ளோம். மும்மொழி கொள்கை ஒன்பது ஒரு ஃபெயிலியர் சிஸ்டம் அதை பின்பற்றுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

 

6ஆயிரம் ஆசிரியர்களுக்கு நீதிமன்றம் தீர்ப்புக்காக காத்துள்ளோம் தீர்ப்பு வந்தவுடன் உடனடியாக பணியிடங்கள் நிரப்பப்படும்.

 கூட்டணியில் வேறு கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு

தமிழக முதல்வர் தலைமைக் கழகம் எடுக்க வேண்டிய முடிவு என தெரிவித்தார்.திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *