தேவேந்திரகுல மக்களை பாதிக்கும் உள்இடஒதுக்கீட்டை அரசு திரும்பப் பெறாவிட்டால் அமைச்சர்கள் கிராமங்களில் ஓட்டுகேட்டு வரமுடியாது எதிர்ப்புகளை சந்திக்கநேரிடும் – புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கைதேவேந்திரகுல மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மூன்று சதவீத உள் இடஒதுக்கீட்டை தமிழக அரசு திரும்பபெற வலியுறுத்தி திருச்சி உழவர் சந்தை
மைதானத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில், தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழகம் முழுவதும் இருந்து பெருந்திரலான தேவேந்திர குல மக்கள் கலந்து கொண்டு தேவேந்திர குல மக்களை வஞ்சித்த திமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டாக்டர். கிருஷ்ணசாமி கூறுகையில்…தமிழ்நாடு அரசின் அருந்ததியினர் உள்இடஒதுக்கீடு சட்டத்தினால், தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் சேர்ந்த கடந்த 15 வருடங்களாக பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.சமூக நீதியின் முன்னோடி என்றும்தமிழகம் மட்டுமன்றி, இந்தியாவிற்றே வழிகாட்டி எனக்கூறுகின்றனர்.
20 ஆண்டுகளாக தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருந்து வருகிறது, பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதம், மிக மிகப் பின்தங்கியவருக்கு 20%, மீதமுள்ள 18% தேவேந்திர குல வேளாளர்கள் அருந்ததியர்கள் உள்ளிட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் 76 சமூகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது, எஞ்சிய ஒரு சதவீதம் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
2009 – 10ம் ஆண்டில் ஆட்சியில் இருந்த கருணாநிதி, 18சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு மற்றும் மூன்று சதவீத இடஒதுக்கீடு வழங்கிவிட்டு எஞ்சிய 15 சதவீதத்திலும் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் திணித்ததால், காலியாக உள்ள உயர்பதவிகள் அருந்தத்தினருக்கு தாரைவாக்கப்பட்டதால், 15 ஆண்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் பதவிகள் தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்.
இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் பட்டியல் இனத்தவர்களுக்கு இருப்பதற்கான இடஒதுக்கீட்டை பிரித்து வழங்குவதில்லை, இது மிகவும்அநியாயமானது. தமிழக அரசு சமூக நீதி என பேசிவிட்டு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அநீதியை இழைத்துள்ளனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ள மூன்று சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்தும், இந்த உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும், பட்டியலின மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் பங்களிப்பை புள்ளிவிவரங்களுடன் திரட்டி வழங்கிவிட்டு பின்னர் பிரிக்கவேண்டும் என அரசை கேட்டுக்கொண்டார்.2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தற்போதைய அமைச்சர்கள் ஓட்டுகேட்கவோ அல்லது அவர்களது சாதனைகளை பீற்றிகொள்ளவோ கிராமங்களுக்கு வரும்போது அதற்கான பின்விளைவுகளை மற்றும் எதிர்ப்புகளை, போராட்டங்களை சந்திக்க வேண்டிஇருக்கும், பட்டியலின மக்களுக்கு என்ன செய்தீர்கள் என மக்கள் நிச்சயம் கேள்வி எழுப்புவார்கள், என்னவிதமான போராட்டம் என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.
இந்தியாவில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தப்படும் நிலையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில் கொடுக்கப்படும் இடஒதுக்கீட்டை, தன்னிச்சையாக வழங்கியிருப்பது சமூக நீதிக்கு எதிரானது இதனை ஸ்டாலின் அரசு திருத்தி கொள்ள வேண்டும் இல்லையென்றால் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்றார். என்று புதிய தமிழக கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments