சீர்மிகு நகரம் ( ஸ்மார்ட் சிட்டி ) திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியை அழகு படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது மாநகராட்சி நிர்வாகம்.ஆனால் அடிப்படை வசதிகளை கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலைகளில் குப்பைகள் தேங்கிக் கிடக்கிறது . இதுமட்டுமின்றி சாக்கடை நீர் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் நாள்தோறும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தற்போது திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட வார்டு-5 சிவராம் நகரில் 282 வீடுகள் உள்ளன. மேலும் 25 அடுக்குமாடி சுமார் 2000 பேர்கள் வசிக்கும் இந்த இடத்தில் கடந்த பல மாதங்களாக கழிவுநீர் செல்லும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் நீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதுமட்டுமின்றி துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நேரில் வந்து பார்வையிட்டு செல்லும் மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் வெளியேறுவதை நிறுத்த இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM








Comments