பாலத்தீனம் காஸாவில் இன படுகொலை பயங்கரவாத செயலில் ஈடுபடும் இஸ்ரேலை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது தலைமையில் போராட்டம்.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் பாலத்தீனம் காஸாவில் இன படுகொலை பயங்கரவாத செயலில் ஈடுபடும் இஸ்ரேலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர்கள் பைஸ் அகமது MC, முகமது ராஜா ஆகியோர் தலைமை தாங்கினார்.தமுமுக மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, இலியாஸ், மமக மாவட்ட செயலாளர்கள் இப்ராஹிம், அஷ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இப்போராட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றிய மமக பொது செயலாளர் அப்துல் சமது MLA, அவர்கள் பெண்கள் குழந்தைகள், முதியவர்கள், என பாராபட்சம் பார்க்காமல் நடத்திவரும் காட்டுமிராண்டி தன்மான தாக்குதலை

நிகழ்த்தும் கொடூர கொலையாளி நாடாக மாறிவிட்ட இஸ்ரேலை உலக நாடுகள் தனிமை படுத்த வேண்டும் எனவும், பல்வேறு நாடுகள் தங்களின் கண்டனங்களை இஸ்ரேலுக்கு எதிராக தெரிவித்து வரும் நிலையில் ஒன்றிய மோடி அரசு இதுவரை இனப்படுகொலையை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பது கண்டனத்திற்குரியது எனவும் . தமிழ்நாடு இசைக் கல்லூரியில் நடைபெற உள்ள இஸ்ரேலிய திரைப்பட விழாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டார்
முஸ்லிம் மகளீர் பேரவை மாநில பொருளாளர் ஷான் ராணி ஆலிமா, ஐபிபி மாநில துணை செயலாளர் முகமது ரபீக், SMI மாநில துணை செயலாளர் அப்பீஸ் கான் ஆகியோர் இஸ்ரேலுக்கு எதிரான ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.மாவட்ட பொருளாளர்கள் ஹுமாயூன் கபீர், காஜா மைதீன், தலைமை செயற்குழு உறுப்பினர்

சபீர் கான் மற்றும் மண்டல செயலாளர்கள், மாவட்ட துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், மகளீர் பேரவை நிர்வாகிகள், ஜமாத் தார்கள், சமூக நல ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



            
            
            
            
            
            
            
            
            
            
Comments