Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாவட்டத்தில் பிஇஎஃப்ஐ தமிழகப் பிரிவின் தொடக்க விழா

இந்திய உடற்கல்வி நிறுவனம் (PEFT) என்ற தேசிய அளவிலான விளையாட்டு ஊக்குவிப்பு அமைப்பின் தமிழகக் கிளை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்பாகத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகிறது. இந்த அமைப்பின் திருச்சிராப்பள்ளி மண்டலத் தொடக்க விழா மெரியாட் ஹோட்டலில் திருவிழா போல் தொடங்கப்பட்டது.

காலை 8:45 மணிக்கு பிரதிநிதிகளின் வருகை மற்றும் பதிவுடன் நிகழ்வு தொடங்கப்பட்டது. விருந்தினர்கள் மற்றும் உடற்கல்வியியல் வல்லுனர்கள் பங்கேற்க தமிழ்த்தாய் வாழ்த்து இசையுடன் விழா தொடங்கியது.அதன் பின், பாரம்பரிய அழகு மிளி குத்துவிளக்கு ஏற்றுதல் மற்றும் சிறப்பு வரவேற்பு நடன நிகழ்ச்சியுடன் ஒரு புதிய பரிமாணத்தைத் தொடங்கி வைத்தது.

PEFT தமிழ்நாடு மாநிலச் செயலர் முனைவர் து.பிரசன்னபாலாஜி வரவேற்புரை நிகழ்த்தி, இந்த கிளையின் நோக்கம் மற்றும் செயல்திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழு உறுப்பினர் பொறியாளர் ஆர். சக்திகிருஷ்ணன் மற்றும் ஒலிம்பியன் மற்றும் ஹாக்கி வீரர் பத்மஸ்ரீ வாசுதேவன் பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, விளையாட்டின் தேசிய வளர்ச்சியில் காணப்படும் பங்கினைப் பற்றி உற்சாகமான கருத்து கருத்துகாகளைப் பகிர்ந்து கொண்டனர்.

PEFT தமிழ்நாடு கிளைத் தலைவரும், ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குநராக (2025-27) தேர்வானவரும்,எக்செல் குழும நிறுவனங்களின் தலைவர் ஆர்.டன் ஏ.கே.எஸ். ஆர் முருகானந்தம் (எம்.எம்.எம்) அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார். உடற்கல்வியை அடித்தளத்தில் இருந்து வலுப்படுத்த. ஒத்துழைத்துத் தொழில்நுட்பங்கள் மற்றும் கல்வி வல்லுநர்களுடன் கூட்டு செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் துவக்க உரை ஆற்றினார். அவர், விளையாட்டும் உடற்கல்வியும் முதன்மைக் கல்வியில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதையும், இளைஞர்களை ஊக்குவிக்க PEFT எடுக்கும் முயற்சிகளை பாராட்டினார்.பின்னர், தமிழ்நாடு மாநிலக கிளையின் புதிய அலுவலர்கள் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டனர். இது மாநிலத்தில் உடறகல்வி முள்ளேற்றத்திற்குப் புதிய பாதையை விளக்குவதாக அமைந்தது.

இந்நிகழ்வு, கல்வியாளர்கள், கொள்கையியலாளர்கள் மற்றும் விளையாட்டு நிபுனர்களை ஒருங்கிணைக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது. தமிழ்நாடு முழுவதும் உடற்கல்வி மற்றும் விளையாட்டுக் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஒரு முக்கிய மைல்கல்லாகும்.நிகழ்வு முடிவில், PEFI தமிழ்நாடு துணைத் தலைவர் பேராசிரியா ஆர். மோகன கிருஷ்ணன் நன்றியுரை ஆற்றினார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *