திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டப்பாளையம் ஊராட்சியில், பழைய ஊராட்சி அலுவலகம் அருகில் மலர்கொடி வயது (59)சாலை ஓரத்தில் கடந்த 40 வருடங்களாக பூக்கடை நடத்தி வருகிறார். கணவனை இழந்த இவர் வாழ்வாதாரமாக பூக்கடை நடத்தி வருகிறார்.
காலை வேளையில் மட்டும் பூ வியாபாரம் செய்து வருவதாக தெரிகிறது. சாலை ஓரத்தில் சுமார் 5 அடி நீளம் 3 அடி அகலத்தில் தற்காலிக பந்தல் போட்டு பூ வியாபாரம் செய்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் 13.06.25 காலை உப்பிலியபுரம் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி) பழனிச்சாமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட பூக்கடை, பயணிகள் நிழல்
கூடத்திற்கு இடையூறாக இருப்பதாக புகார் வந்துள்ளதாகவும், அதன் பேரில் இரு தினங்களுக்குள் பூக்கடையை அகற்ற மிரட்டியதாகவும் மலர்க்கொடி இடம் கூறி சென்றுள்ளார்உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாலையோர ஆக்கிரமிப்பு பூக்கடையை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல்,
சாலையோர ஆக்கிரமிப்புகள் அப்பகுதியில் அதிகம் இருந்தும் குறிப்பாக அந்த கடையை மட்டும் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் சென்று மலர் கொடியை மிரட்டி அகற்ற சொன்னது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments