பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத்துறை, திருச்சி விஷன் மீடியாவுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
எதிர்கால மாணவ சமுதாயத்தினருக்கு ஊடகத்துறையில் இருக்கும் வேலைவாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பத்திரிக்கைத் துறையிலும், எழுத்துத் துறையிலும், செய்திகளைச் சேகரிக்கும் துறையிலும் செய்திகளை ஒழுங்குபடுத்தும் துறையிலும் நல்ல எதிர்காலம் இருப்பதை முன்னிட்டு வரலாற்று துறையினர் திருச்சி விஷன் பத்திரிகையுடன் புது முயற்சியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டனர்.

பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர் முனைவர். பால் தயாபரன் அவர்களும் திருச்சி விஷன் ஊடக நிறுவனர், மனோஜ் தர்மர் அவர்களும் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை உறுதி செய்து கொண்டனர்.

பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் செய்தியாளர்கள் ஆக பணிபுரிவது மக்கள் நலனில் அக்கறை செலுத்துவது பொது சேவைகள் உள்ளிட்டவைகளை திருச்சி விஷன் மீடியா வுடன் இணைந்து களம் காண உள்ளனர்.ஊடகத்துறை மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு அதிகாரிகள் மூலம் செய்து தருவதற்கான முயற்சிகளlலும் அவர்கள் ஈடுபடுவார்கள்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இணைக்கும் பொருட்டு வரலாற்றுத்துறை தலைவர் . முனைவர் ஃபெமிளா அலெக்சாண்டர் மற்றும் திருச்சி விஷன் பத்திரிகையின் சார்பாக திரு. சந்தோஷ் வில்சன் அவர்களும் கையெழுத்திட்டனர்.
வரும் காலங்களில் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து செயலாற்ற ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH







Comments