Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மின்விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்- கொடுக்கப்படும் அழுத்தங்கள் முறியடிப்பு-மகேஷ் பொய்யாமொழி

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் 4ஆவது மாநில மாநாட்டை துவக்கி வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம், திருச்சி மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், HMS அகில இந்திய தலைவர் க.அ.ராஜாஸ்ரீதர், HMS அகில இந்திய பொதுச் செயலாளர் ஹர்பஜன்சிங்சித்து, TPAS மாநிலத் தலைவர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.     

மாநாட்டில் உரை நிகழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழ்நாட்டைப் பொருத்தவரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு நிகராக அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம் மின்வாரியம் தான் இன்றைக்கு தொழில்துறையில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது குறிப்பாக தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழும் தமிழ்நாடு மின்வாகனம் ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல பிரிவுகளிலும் உற்பத்தி துறைகளிலும் கூட நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது இந்தியாவில் உற்பத்தியாகும் இருசக்கர மின்சார வாகனங்களில் 70% தமிழ்நாட்டிலே

 உற்பத்தி ஆகின்றன இந்த சாதனைகளில் எல்லாம் மின்சார வாரிய பணியாளர்களின் உழைப்பு பெருமளவில் கலந்து இருக்கிறது எப்போதும் போற்றுதலுக்குரிய உழைப்பு மின்வாரிய தொழிலாளர்களின் உழைப்பு கடந்த காலங்களில் எல்லாம் பேரிடர் நேரத்தில் மின்வினியோகம் தடைபட்டால் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை மின்சாரம் இல்லாமல் பொழுதை கழிக்க வேண்டிய சூழல் இருந்தது ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை எத்தகைய பேரிடராக இருந்தாலும் சரி உடனுக்குடன் மின்வினியோகம் சீர் செய்யப்படுகிறது அந்த அளவிற்கு நமது மின்வாரியத்தில் பொறியாளர்கள் தொடங்கி

கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை காட்டும் சில நேரங்களில் பெருமாழை காலங்களில் கூட தனி ஆளாக மின்கம்பங்களில் ஏறி மின் இணைப்பை சரி செய்வார்கள் இது போன்ற பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவும் நீங்கள் எல்லோரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் அதே நேரத்தில்உங்களிடம் ஒரு வேண்டுகோளையும் முன் வைக்கின்றேன் எதுவாக இருந்தாலும் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அதுதான் முதன்மையாக இருக்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

சாதனைத் திட்டங்கள் வெற்றி இந்தியாவின் எந்த மாநிலமும் நினைத்துப் பார்க்காத வகையில் 1974 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்புகளை வழங்கி மகத்தான சாதனையை முத்தமிழ் அறிஞர் டாக்டர்கலைஞர் அவர்கள் படைத்தார் அதன் தொடர்ச்சியாக தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் நெசவாளர்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வலுவான மின்விநியோக கட்டமைப்பு என்பதெல்லாம் உருவாக்கப்பட்டன குறிப்பாக கடந்த நான்காண்டுகளில் மூன்று லட்சத்தி 67 ஆயிரத்து 900 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் ஒரு லட்சத்து 82 ஆயிரம்

விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரத்திற்கான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் நடைபாண்டில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நாம் முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார் இந்த சாதனைத் திட்டங்களை வெற்றியடைய வைத்தவர்கள் நீங்கள் தான் என்பதை மறுக்க முடியாது தனியார் மையம் முறியடிப்பு அத்தகைய மின்சார வாரியத்தை இன்னும்பலப்படுத்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் தான் தேவைக்கு ஏற்ப காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்ற அறிவிப்பை நம்முடைய திராவிட மாடல் அரசு வெளியிட்டு

 இருக்கிறது அனைத்திற்கு மேலாக மின்விநியோகத்தை எப்படியாவது தனியாரிடம் ஒப்படைக்கச் செய்யவேண்டும் என்று கொடுக்கப்படும் அழுத்தங்களை எல்லாம் முறியடித்துக் கொண்டிருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அவரது தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் தனியார் மையத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *