Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

நீட் தேர்வு அவசியம் தான் – இளநிலை நீட் தேர்வில் திருச்சி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவன் நெகிழ்ச்சி பேட்டி

தேசிய தேர்வுகள் முகமை நடத்திய இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வை, இந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் 15 மையங்களில், 7,560 மாணவர்கள் எழுதியிருந்தனர். இத்தேர்வு முடிவுகள் நேற்று (ஜூன் 14) வெளியானது. திருச்சி மாவட்டம், புத்தூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன், வேணி. இவர்கள் திருச்சி மாவட்டத்தில் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர்

 இவர்களது மகன் அஸ்வின் கார்த்திக் கமலாநிகேதன் பள்ளியில் பயின்று வருகிறார். அஸ்வின் கார்த்திக் இளநிலை நீட் தேர்வில் 720-க்கு 601 மதிப்பெண்கள் பெற்று திருச்சி மாவட்ட அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 775-வது இடத்தையும் பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவனின் பெற்றோர்கள் இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

தொடர்ந்து மாணவர் அஷ்வின் கார்த்திக் கூறுகையில்:

என்னுடைய பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள் என்பதால் சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்று ஆசை இருந்தது. நீட் தேர்வை பொறுத்தவரை அது ஒரு தேர்வு மட்டும் தான். தன்னுடைய திறனை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு தேர்வு, அதனை கண்டு அச்சப்படத் தேவையில்லை, நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என கடுமையாக படித்தேன். நீட் தேர்வில் சிலபசை தாண்டி கேள்விகள் கேட்கப்படவில்லை. சிறந்த மாணவர்கள் மருத்துவர்கள் ஆவதற்கு நீட் தேர்வு கட்டாயம் இருக்க வேண்டும் என கூறினார். 

அதனை தொடர்ந்து அவரது தந்தை மருத்துவர் இளங்கோவன் கூறும்போது

தனது மகனை நீட் தேர்விற்கு தயாராகும் பொழுது ஒருமுறை கூட படி என்று நாங்கள் கட்டாயப்படுத்தி கூறியதில்லை. எங்களது மகன் தானாகவே படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். திருச்சி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்திருப்பது சந்தோஷம் அளிக்கிறது எனது மகன் அடுத்த கட்டத்திற்கு தேர்ச்சி பெற்று மருத்துவராக வேண்டும் என்பது எங்களது ஆசை.

நீட் தேர்வு என்பது தேவையான ஒன்றுதான் மாணவர்கள் தேர்வை தேர்வாக பார்த்து தேர்ச்சி பெற்று சிறந்து விளங்க வேண்டும் இல்லையென்றால் நன்கு படிக்க வேண்டும் வேறு எந்த முடிவுகளும் எடுக்கக் கூடாது என கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *