திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் இரவில் கோவில் கதவை உடைத்து உள்ளே சென்று அம்மனின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் மதிப்பிலான நகை மற்றும் கோவில் உண்டியலையும் திருடி சென்றனர்.
இதைத் தொடர்ந்து கோவில் அருகே உள்ள காட்டு பகுதியில் உண்டியலில் இருந்த பணத்தை எடுத்து விட்டு உண்டியளை தூக்கி எறிந்து சென்றுள்ளனர்.காலையில் கோவிலை திறக்க வந்த பூசாரி கதவு கோவில் திறந்து இருப்பதை கண்டு ஊர்
பொதுமக்களிடம் கூறியதை தொடர்ந்து துறையூர் காவல்துறையினுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.அம்மன் கழுத்தில் இருந்த தாலி காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் உள்ள பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments