தமிழக முதல்வர் விஜயின் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ்

ஆகியோரின் வழிகாட்டுதலோடும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி எனர்ஜி அப்துல் ரஹ்மான்,திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர் நிஷா அப்துல் ரஹ்மான் ஆகியோரது ஏற்பாட்டில் திருச்சி ரெட்டை வாய்க்கால் பஸ் ஸ்டாப் அருகில் இன்று காலை ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நாச்சி குறிச்சி சமுதாய கூடத்தில் ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் ஏழை எளியோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் வந்து சேர அறிவுறுத்தப்பட்டது இதனால் 500-க்கும் மேற்பட்டோர் பலன் அடைந்தனர் இந்நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரா, மாவட்டத் தலைவர் செந்தில்,மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஆனந்தகுமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டேனியல், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் மணிகண்டன், சதீஷ், தீபன், மணிகண்டன் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments