திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று (15.08.2026) சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையர் வீர்பிரதாப் சிங் இ.ஆ.ப. மற்றும் துணை மேயர் ஜி. திவ்யா ஆகியோர் முன்னிலையில், மேயர் மு.அன்பழகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

விழாவில், மாநகராட்சி அலுவலகத்தில் 25 ஆண்டுகள் மாசற்ற முறையில் சிறப்பாகப் பணியாற்றிய 10 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தலா ரூ. 2,000 ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் குழந்தைகள் 6 பேருக்கு முறையே ரூ. 10,000, ரூ. 7,000 மற்றும் ரூ. 5,000 ரொக்கப் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் மேயரால் வழங்கிப் பாராட்டப்பட்டது.

மேலும், மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய வார்டு குழு அலுவலகம், நகர நல மையம், உதவி ஆணையர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 31 நபர்கள் கௌரவிக்கப்பட்டு, அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் எடமலைப்பட்டிபுதூர் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மேயர் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, அரசு தலைமை மருத்துவமனை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்திலும், காந்தி சந்தை அருகில் உள்ள போர் வீரர்கள் நினைவுத் தூணிலும் மேயர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தார்.
இந்நிகழ்வில் துணை ஆணையர் அஜீதா பர்வீன், நகரப் பொறியாளர் பி. அண்ணாத்துரை, மண்டலத் தலைவர்கள் த. துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பி. ஜெயநிர்மலா, நகர் நல அலுவலர் ம. கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள், உதவி ஆணையர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments