Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி காவல் பயிற்சி பள்ளி முதல்வருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்!

கு.ராமச்சந்திரன், த/பெ.குழந்தைவேலு என்பவர் கடந்த 03.03.2026 அன்று முதல் திருச்சி காவல் பயிற்சி பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

இவர் இதற்கு முன்னர் 13.07.2022 அன்று முதல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் சென்னை நகர சிறப்பு பிரிவு-1, கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி அயல்பணியாக விருதுநகர் பிரிவில் பணியாற்றி உள்ளார். இதற்கு முன்னர் இதே பிரிவில் சிவகங்கை, திருச்சி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காவல் துணைக்கண்காணிப்பாளராகவும், மேலும் திருச்சி மாநகர காவல் நுண்ணறிவு பிரிவிலும், ஸ்ரீரங்கம் சரக சட்டம் & ஒழுங்கு பிரிவிலும் காவல் உதவி ஆணையராகவும் பணியாற்றி உள்ளார்.

இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் கிராமம் ஆகும். இவர் பள்ளி படிப்பை (வாராப்பூர் மற்றும் TELC புதுகை) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், கல்லூரி படிப்பை புதுக்கோட்டை மன்னர் கல்லூரியிலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் (B.com & M.com) படித்துள்ளார்.

இவர் 01.03.1996 அன்று நேரடி சார்பு-ஆய்வாளராக பணியில் சேர்ந்து ஓராண்டு பயிற்சி மற்றும் 6 மாதம் செய்முறை பயிற்சியை முடித்த பின்னர் திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பல்வேறு காவல்நிலையங்களில் பணிபுரிந்துள்ளார். அப்போது மிகச்சிறப்பாக பணிபுரிந்து, கள்ளச்சாராயங்களை முற்றிலுமாக ஒழித்தும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் பணிபுரிந்தும், அப்போதைய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகளின் வெகுமதியையும்

பாராட்டையும் பெற்றுள்ளார். இவர் 04.04.2005 காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று, தேனி மாவட்டத்தில் பணிபுரிந்து, பின்னர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் ஜனவரி 2006 முதல் 2016 வரை மதுரை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் பணியாற்றியும், 18.01.2016 அன்று காவல் துணைக்கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் சிவகங்கை, திருச்சி மற்றும் விருதுநகரில் பணிபுரிந்தும், கூடுதல் காவல் கண்காணிப்பாளராக விருதுநகரில் பணிபுரிந்தும் மொத்தம் 47 அரசு அலுவலர்கள் மீது லஞ்சம் கேட்டு பெற்ற குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்து, அவர்களை பொறி வைத்து பிடித்து கைது செய்துள்ளார். மேலும் அந்த கால கட்டத்தில் லஞ்சம் வாங்குவதாக சந்தேகிக்கப்படும் சந்தேக அரசு அலுவலர்களின் மீது மொத்தம் 57 கண்காணிப்பு அறிக்கைகள் அனுப்பி நடவடிக்கைகள் எடுத்துள்ளார். இவர் அரசு அலுவலகங்கள் 13 இடங்களில் திடீர் சோதனை நடத்தியுள்ளார். மேலும் 32 பொறி வைப்பு வழக்குகள் இவரது நேரடி மேற்பார்வையில்

நடைபெற்றுள்ளது. திடீர் சோதனையின்போது முறையாக கணக்கு காண்பிக்கப்படாத பணம் மொத்தம் ரூ.48,23,400/- கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 104 பொறி வைப்பு வழக்குகள் மற்றும் 22 திடீர் சோதனை வழக்குகளில் எதிரிகளை கைது செய்வதற்கு மற்ற புலன் விசாரணை அதிகாரிகளுக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளார்.

மேற்கண்ட கால கட்டங்களில் இவர் லஞ்ச புகார் தொடர்பாக அரசு அலுவலர்கள் மீது முறையே முதனிலை விசாரணை, விரிவான விசாரணை மற்றும் பல குற்ற வழக்குகளில் சிறப்பான விசாரணை / புலன் விசாரணை மேற்கொண்டு மொத்தம் 123 வரைவு இறுதி அறிக்கைகள் தயார் செய்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்ககத்திற்கு அனுப்பியுள்ளார்.
இதற்கிடையில், இவர் பிப்ரவரி 2018 முதல் ஜூன் 2021 வரை திருச்சி மாநகர காவல் ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு சரகத்திலும், நுண்ணறிவு பிரிவிலும் காவல் உதவி ஆணையராக மிக சிறப்பான முறையில் பணிபுரிந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் முக்கிய பாதுகாப்பு அலுவல்களை திறமையாக கையாண்டு உயர்அதிகாரிகளின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.

இவர் 1996-1997ஆம் ஆண்டில் பயிற்சியின்போது தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். மேலும், இவரது மேற்கண்ட மெச்சத்தகுந்த பணிகளை பாராட்டி, இவருக்கு உயர் அதிகாரிகளால் 80 வெகுமதிகள், 40க்கும் மேற்பட்ட நற்பதிவுகள் வழங்கப்பட்டுள்ளது. இவரது மெச்சத்தகுந்த பணிகளை பாராட்டி 2009-இல் தமிழக முதல்வர் (அண்ணா பதக்கம்) பதக்கமும், 2012-இல் தமிழக ஆளுநரின் விஜிலென்ஸ் தங்கப்பதக்கமும், 2018-இல் மெச்சத்தகுந்த பணிக்காக குடியரசு தலைவர் பதக்கமும், 2019-இல் (அத்திவரதர் பாதுகாப்பு பணி) தமிழக முதல்வர் பதக்கமும், 2019-இல் மத்திய உள்துறை அமைச்சகத்தால் உட்கிரிஸ்ட் சேவா பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டு உயர் அதிகாரிகளின் நன்மதிப்பையும், பாராட்டுகளையும் மற்றும் வெகுமதிகளையும் பெற்றுள்ளார்.

இவரது செயல்பாடுகள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை மற்றும் காவல் துறையின் நன்மதிப்பை உயர்த்தும் வகையில் மிகவும் மெச்சத்தகுந்ததாகவும் இருந்துள்ளது.
ஆகையால் கு.ராமச்சந்திரன், முதல்வர் / கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவல் பயிற்சி பள்ளி, திருச்சி முன்னர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, நகர சிறப்பு பிரிவு-1, சென்னை அயல் பணி விருதுநகர் அவர்களுக்கு 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசு தலைவர் அவர்களால் 2026ஆம் ஆண்டிற்குரிய தகைசால் பணிக்கான குடியரசு தலைவர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *