திருச்சிராப்பள்ளி மாவட்டம் ராம்ஜி நகர் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பவித்ரன், சுந்தர்ராஜன், சரவணன் ஆகிய மூன்று நபர்களையும் ராம்ஜிநகர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் எட்டு கிலோ கஞ்சா பறிமுதல்
செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று பேர் மீதும் திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் செல்வரத்தினம் அவர்கள் பரிந்துரையின் பெயரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு
இன்று 18/06/2025-ஆம் தேதி சிறையில் உள்ள மூவரிடமும் சார்பு செய்யப்பட்டது. மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 2025 முதல் தற்போது வரை மொத்தம் 43 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments