திருச்சி புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடைப்பெற்ற “ NMC Maths 2020 ” என்ற கணிததிறன் போட்டி நடைபெற்றது.இப்போடியில் 120க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சார்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
கணிதத்துறைத்தலைவர் பி.பாக்கியலெட்சுமி கல்லூரி முதல்வர் அ.இரா.பொன்பெரியசாமி கல்லூரி நிர்வாகக் குழுத்தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மற்றும் புலத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கணிதவியல் ஒளிப்பட விளக்க காட்சி, கணித வினாடி வினா, கணித அதிசயம், மனக்கணிதம், கணித ஜாம்பவான், கோலத்தில் கணிதம் மொத்தம் ஆறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.17 கல்லூரிகள் கலந்துக்கொண்ட போட்டிகளில் ஓட்டு மொத்த வெற்றியாளாராக திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதலிடமும், திருச்சி சீதாலெட்சுமி இராமசாமி கல்லூரி இரண்டாம் இடமும் பெற்றனர்.
மேலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகக் குழுத்தலைவர் பொன்.பாலசுப்பிரமணிய ன் மற்றும் கல்லூரி முதல்வர் அ.இரா.பொன்பெரியசாமி அவர்களும் பரிசுகளை வழங்கினார்கள். இறுதியாக கணிதத்துறை பேராசிரியர் திருமதி.சி.ஹேமலதா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           23
23                           
 
 
 
 
 
 
 
 

 28 February, 2020
 28 February, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments