டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய கூட்டத்திற்கு சென்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என மொத்தம் 88 பேர் திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் டெல்லியில் மசூதி கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா இருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மசூதி ஒன்றில் கடந்த 13ம் தேதி நடந்த மதகுருமார்கள் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மதகுருக்கள் நாடு முழுவதிலும் இருந்து கலந்துக்கொண்டுள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த கூட்டத்தில் சிலர் கலந்து கொண்ட நிலையில், இதில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் டெல்லி சென்று திரும்பிய 28 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் என 88 பேர் திருச்சி அரசு மருத்துவமனை சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இருப்பதாகவும் ஆய்வு முடிவுக்கு பின்னரே கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           124
124                           
 
 
 
 
 
 
 
 

 01 April, 2020
 01 April, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments