சென்னை அண்ணா அறிவாலத்தில் உள்ள கலைஞர் அரங்கம் கொரோனா சிறப்பு பிரிவுக்கு வழங்கப்பட்டதை அடுத்து திருச்சி கலைஞர் அறிவாலயமும் கொரோனா சிறப்பு பிரிவிற்கு கே.என் நேருவால் ஒப்படைப்படைக்கப்பட்டது.
திருச்சி – கரூர் புறவழிச்சாலையில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கலைஞர் அறிவாலயத்தை கடந்த 2008-ம் ஆண்டு அமைத்தார். இதை அப்போதைய முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி திறந்து வைத்தார்.
சுமார் 1000 பேர் அமர்வதற்கான இருக்கை வசதி கொண்ட இந்த கட்டடத்தில் திமுகவின் மாவட்ட செயற்குழு கூட்டம் உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட பிற நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலத்தில் உள்ள கலைஞர் அரங்கம் கொரோனா சிறப்பு பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு திருச்சி கலைஞர் அறிவாலயமும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கடிதத்தை திமுக முதன்மைச் செயலாளர், கே.என்.நேரு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் நேரில் வழங்கினார்.
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           136
136                           
 
 
 
 
 
 
 
 

 01 April, 2020
 01 April, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments