நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தாக்கத்தால் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பல இடங்களில் பல மக்கள் துயரில் ஆழ்ந்துள்ளனர். கொரோனா தற்காப்பு கவசம் கூட கிடைக்காமல் பலர் திண்டாடி வருகின்றனர். தங்கள் வீட்டிற்கு வரும் தூய்மைப் பணியாளர்களிடம் இருந்து தன்னுடைய பணியை துவங்கிய திருச்சி பெண் தன்னார்வலர்!!
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியை சேர்ந்தவர் வசுந்தரா ராம்கோபால். கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பணியை மக்கள் கூடி உள்ள இடங்களுக்கு சென்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையில்லை! பொதுவாக நாம் இருக்கும் இடத்திலேயே பணியினை முதலில் மேற்கொள்ளலாமே! என்கின்ற விதமாக தன்னுடைய வீட்டிற்கு வரும் தூய்மைப் பணியாளர்கள் முதல் அனைவருக்கும் முகக் கவசங்களை தன்னுடைய சொந்த செலவில் இலவசமாக வழங்கி வந்துள்ளார்.
இதுகுறித்து வசுந்தரா அவர்கள் கூறியபோது
“கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு விழிப்புணர்வாக என்னுடைய பங்களிப்பு ஏதாவது இருக்க வேண்டுமே என்கின்ற எண்ணத்தில் எங்கள் வீட்டிற்கு வரும் துப்புரவு பணியாளர்கள் முக கவசம் இல்லாமல் வருவதைப் பார்த்தேன். முதலில் ஐந்து பத்து என்று கொடுத்து வந்தேன். இப்போது இன்றுவரை சுமார் 500 மேற்பட்ட முக கவசங்களை இலவசமாக வழங்கி வந்துள்ளேன்.
துப்புரவு பணியாளர்கள்,பொன்னம்பட்டி துப்புரவு பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், உழவர் சந்தையில் உள்ள சிலருக்கு முக கவசங்களை இலவசமாக சென்று வழங்கினேன்.இதற்கு பாஸ்ட் பிரசிடன்ட் இன்னர்வீல் கிளப் திருச்சிராப்பள்ளி அவர்கள் உதவி புரிந்தார்கள்.இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மக்களுக்காக என்னால் முடிந்த உதவிகளை விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மிகுந்த பெருமை கொள்கிறேன்.என்றார்.
தனக்கென வாழாமல் பிறருக்காக வாழும் சிலர் சமூகத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர். தன்னார்வலர்களாக!!
நாமும் நம்மால் முடிந்த முகக் கவசங்கள் மற்றும் சில பொருள்களை நம் வீட்டில் அருகில் உள்ளவர்களுக்கு கொடுத்து உதவலாமே!!
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           126
126                           
 
 
 
 
 
 
 
 

 06 April, 2020
 06 April, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments