திருச்சி மாநகரில் கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு பாதுகாப்பு பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ள போலீசார் 437 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் கூடிக்கொண்டே போகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்துள்ளது.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், திருச்சி மாநகரில் கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு பாதுகாப்பு பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ள காவல் உதவி ஆணையர்கள் 4 பேர், ஆய்வாளர்கள் 12 பேர் உட்பட மொத்தம் 437 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கொரோனா முன்னெச்சரிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கும், மருத்துவமனைகளிலும் பாதுகாப்பளித்தவர்கள்.
மாநகர போலீசாருக்கும் சுழற்சி முறையில் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தடுப்பு பணி & பாதுகாப்பில் திருச்சி மாநகர போலீசாருடன் இணைந்து பணியாற்ற 60 வயதிற்கு உட்பட்ட முன்னாள் ராணுவத்தினருக்கும் மாநகர காவல் ஆணையர் வரதராஜு அழைப்பு விடுத்துள்ளார்.
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           126
126                           
 
 
 
 
 
 
 
 

 15 April, 2020
 15 April, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments