கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தால் நாளை முதல் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.ஆனால் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் எதுவும் நடைமுறைக்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் புதிய தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். இதற்கென மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்துள்ளது. அந்தக் குழு தன்னுடைய முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, அதன் ஆலோசனைகளை முதலமைச்சரிடம் தெரிவிக்க உள்ளது.
இந்தக் குழுவில் ஆலோசனைகளை ஆராய்ந்து முதலமைச்சர் முடிவெடுக்க உள்ளார். எனவே தமிழக அரசு அறிவிக்கும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று அரசு தெரிவித்துள்ளது.
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           126
126                           
 
 
 
 
 
 
 
 

 19 April, 2020
 19 April, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments