திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில்  திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் வழங்கினார்.
மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் திருநங்கைகள் என ஏராளாமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு உதவிடும் வகையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கொரோனா நிவாரணப் பொருட்களை மாநகராட்சி ஆணையர் வழங்கினார்.
மாநகராட்சி பகுதியில் எந்தவிதமான வருமானமின்றி, ஆதரவின்றி இருக்கும் திருநங்கைகளுக்கு உதவிடும் வகையில் பொன்மலை கோட்டம் உதவி ஆணையர் எம்.தயாநிதி அவர்கள் ஏற்பாட்டில் 36 திருநங்கைகளுக்கு அரிசி , மளிகைப்பொருள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட ரூ.1500 மதிப்பிலான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் ஆணையர் சிவசுப்பிரமணியன் கூறுகையில் “ஆதரவின்றி இருக்கும் திருநங்கைகள் தாங்கள் வாழ்வாதரத்தை பெருக்குவதற்கு கொரோனா வைரஸ் சமூக பரவலை தடுக்க பயன்படுத்தும் முக கவசங்கள் தயார்செய்து கொடுத்தால் அதை மாநகராட்சி நிர்வாகம் வாங்கிகொள்வோம் என்று தெரிவித்தார். அனைவரும் கட்டயமாக முக கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           129
129                           
 
 
 
 
 
 
 
 

 27 April, 2020
 27 April, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments