Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

கொரோனா நெகிழ்ச்சி! 11 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை தவறவிட்டவரிடம் சேர்த்த திருச்சி வாட்ச்மேன்!!

சாலையில் ஒரு பையில் 11 ஆயிரம் பணம் மற்றும் விலையுயர்ந்த செல்போன் கீழே கிடைக்கிறது. அதை நாம் எடுத்து இருந்தால் என்ன செய்திருப்போம்? அதுவும் இது போல கொரோனா மாதிரியான காலகட்டத்தில் கண்டிப்பாக அதை நாம் எடுத்து உரியவரிடம் சேர்த்து இருக்கமாட்டோம் என்பதே நிதர்சனம்.
ஆனால் ஒரு வாட்ச்மேன் அதை எடுத்து உரியவரிடம் சேர்த்து நெகிழ வைத்துள்ளார்.அதை பற்றிய சிறப்பு தொகுப்பு தான் இது!!

மணிகண்டம் அருகே பாகனூர் பகுதியில் மளிகை கடை வைத்திருப்பவர் ஜோஸ்பின் ராஜ். மளிகை கடைக்கு தேவையான பொருள்களை திருச்சியில் தினமும் வந்து வாங்கிச் செல்வார். வழக்கமாக நேற்று காலை 6 மணியளவில் வரும்போது 11 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை இருசக்கர வாகனத்தின் பின் கொக்கியில் மாட்டியுள்ளார்.திருச்சி தேசிய கல்லூரி அருகே வரும்போது பணம் மற்றும் செல்போனுடன் பை அறுந்து கீழே விழுந்தது.இது தெரியாமல் மார்க்கெட்டில் சென்று திரும்பி பார்க்கும் பொழுது பையை காணாமல் மிகவும் துடிதுடித்துப் போய் உள்ளார்.

இந்த கீழே விழுந்த பையை அந்த வழியாகச் சென்றவர்கள் சிலர் கொரோனா பயத்தால் அதனை எடுக்கவில்லை.தேசியக் கல்லூரி வாட்ச்மேன் முத்துகிருஷ்ணன் பையை எடுத்து பார்த்த பொழுது 11,000 பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் இருப்பதை பார்த்து நேராக அதனைக் கொண்டு சென்று கல்லூரி முதல்வர் சுந்தரராமனிடம் ஒப்படைத்தார்.

பின்பு தான் வந்த வழியில் பார்வையிட்டு எங்கும் கிடைக்கவில்லை என தன்னுடைய செல்போனுக்கு வேறு நம்பரில் இருந்து அழைப்பு விடுத்துள்ளார்.பின் தேசிய கல்லூரியில் எடுத்து வைத்திருப்பதாகவும், தங்களுடைய ஆதாரத்தை எடுத்து வந்து காண்பித்து எடுத்துச் செல்லுமாறு கூறி இருக்கின்றனர்.இவர் தன்னுடைய ஆதாரத்தை எடுத்து சென்று காண்பித்து பையை வாங்கி வந்துள்ளார்.

பையை வைத்திருந்த வாட்ச்மேன் முத்துகிருஷ்ணனிடம் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துள்ளார் மளிகை கடைக்காரர்.“அந்த மனசு தான் சார் கடவுள்” என அன்பே சிவம் படத்தின் வசனம் போல அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டார் தேசியக்கல்லூரி வாட்ச்மேன் முத்துகிருஷ்ணன்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *