Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கடைசி போகம் நேந்திரம் வாழைக்காயை கேரளாவிற்கு ஏற்றுமதி செய்த திருச்சி விவசாயிகள்

No image available

திருச்சி திருவளர்ச்சோலை முதல் கல்லணை வரை உள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் பெரும்பாலும் வாழைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் இந்த வருடத்தில் நேந்திரம் வாழைக்காயை கடந்த வருடம் பயிரிட்டு அதனுடைய கடைசி போகத்தை தற்போது அறுவடை செய்து கேரளாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளனர். இனிமேல் திருச்சியில் அடுத்த மார்ச் மாதம்தான் நேந்திரம் பயிரிட போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement

கொரோனா நோய்த்தொற்று ஒருபுறமிருந்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்றும், பயிரிட்ட வாழைக்காய் கையை கடிக்காமல் ஓரளவு பணம் வந்ததாகவும் தெரிவித்தார் விவசாயி ஹரிகிருஷ்ணன்…

இந்தநிலையில் திருவளர்ச்சோலை அருகே உள்ள கிளிக்கூடு பகுதி விவசாயிகள் தங்களுடைய கடைசி போக நேந்திரம் வாழைக்காய் இன்று கேரளாவிற்கு ஏற்றுமதி செய்தனர். கிலோ 20 ரூபாய் முதல் விற்பனையாகும் தெரிவித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *