Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மக்கள் சிதைந்து கொண்டிருக்கும் நாட்டில் சிலைகள் அவசியம் தானா? DYFI திருச்சி மாவட்ட செயலாளர் பா.லெனின் கேள்வி

No image available

நாட்டில் படுக்கை வசதிகள் இல்லை மருந்துகள் இல்லை,ஆக்சிஜன் இல்லை சாமானியர் வாழ்வதற்கான சூழல் இந்தியாவில் இல்லாதபோது இந்தியாவை உலக தரத்தில் தலைசிறந்த நாடாக காட்டிக் கொள்வதற்காக மோடி அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதாக திருவெறும்பூர் கம்னியூஸ்ட் கட்சி தலைவர் லெனின் குற்றம்சாட்டியுள்ளார்.

 அவர் கூறுகையில்,

“மோடி ஸ்டேடியம் 800 கோடி, 3000 கோடியில் பட்டேல் சிலை, ராமர் ஆலயம் 1,500 கோடி என மக்களின் வரிப்பணத்தை தேவையற்றவைக்கு செலவு செய்து பிரம்மாண்டமான ஒன்றை காட்டி உலகை மிரள வைத்துக்கொண்டுதான் இருக்கிறாரே தவிர, மக்களை வாழ வைக்க வேண்டிய எண்ணத்தில் மோடி செயல்படுவதில்லை.

 டெல்லியில் கொரானாவில் இறந்தவர்களிறன் உடலை மக்கள் சாலையிலேயே எரிக்கும் அவல நிலையில் உள்ளது.. இன்னும்சொல்லப்போனால் கொஞ்ச காலத்தில் மொத்த இந்தியாவும் எரியத்தான் போகிறது.மக்கள் வாழத் தகுதியற்ற நாடாக இந்தியா மாறும் நிலை வெகுதூரமில்லை. 

இந்த கொரானா காலகட்டத்தில் மக்கள் அன்றாட வாழ்க்கையில் கூட மூன்று வேளை உணவு உண்பதற்கு மிகுந்த பாடுபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அத்தியாவசியத்தை பார்க்காமல் அனாவசியமான செலவுகளை அரசு செய்வது அரசின் மெத்தன போக்கு மட்டுமின்றி மக்கள் மீதான அக்கறையற்ற செயலாகவே கருதப்படும்.

மேலும்,

” ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழலில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது கூட மக்களிடம் பிரதமர் நிதி என்று நிதி திரட்டினார். ஆனால், அந்த பணத்தையும் என்ன செய்தார் என்பதற்கான எவ்வித சான்றுகளும் இல்லை.

மக்களின் வரி பணத்தை வாங்கியும் மக்களை வாழ விடாமல் மக்களை சுரண்டி ஒரு ராணுவ ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி.தடுப்பு ஊசி செலுத்துவதற்கு அதிக பணம் வசூலிப்பதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.90 கோடி பேருக்கு இரு முறை தடுப்பு ஊசி செலுத்துவதற்கு ரூபாய் 150 பெற்றுக்கொண்டு ரூபாய் 27 கோடி ரூபாய் இதுவரை அரசுக்கு கிடைத்துள்ளது.

மக்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் வீதியில் இறங்கி போராடும் காலம் வெகுதூரமில்லை” என்றும் கூறியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *