சிவகங்கை டவுன் போலீஸ் ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்தவர் அருவிசெல்வம் (52 ). இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இடையே நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அருவிசெல்வம் இந்த வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட ஆலோசனை மையத்திற்கு வந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து அவரை பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து செஷன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments